கைலாஷ் மானசரோவர் யாத்திரை; இந்தியா- சீனா இடையில் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க ஒப்புதல்..!
Kailash Mansarovar Yatra Approval to resume direct flight service between India and China
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி , இந்தியா- சீனா இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 75 வருடம் நிறைவடையும் 2025-ஆம் ஆண்டில், இரு நாடுகளும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை 2020-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது குறித்த நேரடி விமான சேவையை தொடங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Kailash Mansarovar Yatra Approval to resume direct flight service between India and China