கனடா கோயிலில் இ்ந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: காலிஸ்தான் இந்தர்ஜீத் கோசல் கைது! - Seithipunal
Seithipunal


கனடாவின் ஒட்டாவா நகரத்தில், கடந்த வாரம் நிகழ்ந்த இந்து கோயில் தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்புடைய வழக்கில் காலிஸ்தான் ஆதரவாளரும் போராட்ட ஒருங்கிணைப்பாளருமான இந்தர்ஜீத் கோசல் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் இந்து மகா சபைக்குச் சொந்தமான கோயிலில், இந்திய தூதரகம் சார்பில் நடத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாமுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

போராட்டத்தின் போது, கோயிலுக்குத் தரிசனத்திற்கு வந்த இந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் காலிஸ்தான் கொடிக் கம்பங்களை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்களை தாக்கினர், இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இந்திய அரசும் தாக்குதல்காரர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளது.

பீல் மண்டல காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதலின் தொடர்பில், பிராம்ப்டனைச் சேர்ந்த இந்தர்ஜீத் கோசல் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த போலீசார், பின்னர் சில நிபந்தனைகளின் பேரில் அவரை விடுதலை செய்தனர். அவர் விரைவில் ஓன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

காலிஸ்தான் ஆதரவுக்கான "சீக்கியர்களுக்கான நீதி இயக்கத்தின்" கனடா பிரிவின் முக்கிய பொறுப்பில் இந்தர்ஜீத் கோசல் உள்ளார். முன்னர் இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார், இதன் பின்னர் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் கோசல் ஆவார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kannada temple attack on Hindus Khalistan Inderjeet Ghosal arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->