கென்யாவில் நடைபெற்ற கோர விபத்தில் 48 பேர் பலி - தலைவர்கள் இரங்கல்! - Seithipunal
Seithipunal


கென்யாவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 48 பேர் பலி மற்றும் 30 பேர் படுகாயம்: 

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு பொதுமக்கள் வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதும் வழக்கம். 

கென்யா நாட்டில் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

இந்நிலையில், நேற்று கெரிச்சோவை நோக்கிப் பயணித்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, மேற்கு கென்யாவில் லண்டியானி சந்திப்பு என அழைக்கப்படும் பகுதியில் இருந்த பல வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதியதில் பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன. 

இந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். அதில் 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கென்ய நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்பட பல தலைவர்கள் விபத்து குறித்து அறிந்து, இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kenya road crash 48 members killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->