லாட்ஜுக்கு அழைத்து போலீஸ்.. பொறியில் சிக்கிய எலியான கேரள மாணவர்.! லண்டன் போலீசார் அதிரடி.!
Kerala student trying to abusing London child
14 வயதான சிறுமிகளுக்கு இங்கிலாந்து நாட்டில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு நிறைய புகார்கள் வந்துள்ளது. இந்த குற்றங்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்கள் மூலம் நிகழ்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக செய்பவர்களை லண்டன் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து மேற்படிப்புக்காக லண்டன் வந்த வாலிபர் ஒருவர் சிறுமிகளுக்கு ஆபாச அழைப்பு விடுத்தது தெரியவந்தது.
கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். திட்டப்படி அவர் சமூக வலைதளங்கள் மூலமாக சிறுமிக்கு அழைப்பு விடுத்தார். இதை தெரிந்துகொண்ட சைபர் கிரைம் போலீசார் அந்த வாலிபரை பொறி வைத்து பிடிக்க திட்டம் தீட்டினர்.
ஒரு போலி முகவரியை அனுப்பி வாலிபரை அந்த இடத்திற்கு வருமாறு அழைத்தனர். உல்லாசமாக இருக்கலாம் என்று எண்ணிய கேரள வாலிபர் உற்சாகமாக கிளம்பி சென்றார். பின்னர் அவரை கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில் இளைஞர் எழுதி என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அவர் போலீசாரின் விசாரணைக்கு பின் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Kerala student trying to abusing London child