அமெரிக்கா தயாரித்த 110 வெடிகுண்டுகள்.! வடகொரியாவில் கண்டுபிடித்து அழிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 50,000 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டங்களை வடகொரியா அதிபர் கிம் ஜாங் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக தலைநகர் பியாங்யாங்கில் பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பியாங்யாங்கில் ஹ்வாசோங் பகுதியில் கட்டுமான பணிகளின் பொழுது, கொரியா போரில் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட 110-க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நகர நிர்வாகிகள் கூறும்பொழுது, 1950-1953 கொரியப் போரில் எஞ்சியிருக்கும் வெடிகுண்டுகள் கட்டிடங்களில் அடியில் புதைந்துள்ளதாகவும், நகர பொது பாதுகாப்பு பணியகத்தின் நிபுணர்கள் சாதனங்கள் மூலம் கண்டுபிடித்து அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் வெடிகுண்டுகளில் பல துரு பிடித்த நிலையில், எந்நேரமும் வெடிக்கும் அபாயம் இருப்பதால் அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Korea war bombs discovered and destroyed in North korea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->