லாகூர் நகரில் பற்றி எறிந்த வீடு! 10 பேர் பலி! நடந்தது என்ன? போலீசார் தீவிரம்! - Seithipunal
Seithipunal


லாகூர் நகரில் ​திடீரென வீட்டில் பற்றி எறிந்த தீயில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:

பாகிஸதான் : பஞ்சாப் மாநிலம்: லாகூர் நகரில் இன்று அதிகாலையில் திடீரென ஒரு வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக வீடு முழுவதும் பரவி பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டனர். 

இந்த தகவல் அறிந்த வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். 

இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

அதில் ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார். தீ விபத்து குரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக  தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து பற்றி விரிவான முறையில் விசாரணை நடத்த பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஷின் நக்வி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakur house fire10 members killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->