கடைசி உயிருள்ள பணயக் கைதிகள்!!! ஹமாஸ் அறிவித்தது என்ன? - Seithipunal
Seithipunal


காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் ஹமாஸ் அமைப்பினர், கடந்த சனிக்கிழமை 6 உயிருள்ள இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் வரும் வியாழக்கிழமை 4 பேரின் இறந்த உடல்களைத் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளன.

பணயக் கைதிகள்:

இதில் இந்த 6 பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக விடுவிக்கப்பட உள்ளன. இவர்கள்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக் கைதிகள் ஆவார்கள். ஹமாஸ் தலைவர்க் கலீல் அல்-ஹய்யா, " இஸ்ரேல் நாடானது இறந்தவர்களில் பிபாஸ் குடும்பத்தில் உள்ள இரண்டு இளம் சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயார் மரணங்களை உறுதிப்படுத்தவில்லை "என அறிவித்திருந்தார்.

பிரதமர் அலுவலகம்:

மேலும் , ஹமாசின் அறிவிப்புக்குப் பிறகு " பெயர்கள் , புகைப்படங்கள் மற்றும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று பிரதமர் அலுவலகம் பொதுமக்களை வலியுறுத்தியது. இந்தப் போரின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறிய ஷிரி பிபாஸ் மற்றும் அவரது மகன்கள் கிஃப்பிர் மற்றும் ஏரியல் குறித்து இஸ்ரேல் நீண்ட காலமாகக் கவலையை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. மேலும் கணவரும் தந்தையுமான யார்டன் பிபாஸ் தனித்தனியாகக் கடத்தப்பட்டு இந்த மாதம் விடுவிக்கப்பட்டன . இதில் பணயக் கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் ,விடுவிக்கப்பட உள்ள ஆறு  பணயக்கைதிகளின் பெயர்களைத் தெரிவித்துள்ளது.

பணயக் கைதிகளின் பெயர்:

அதில் எலியா கோஹன்,தல் ஷோஹாம் ,ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல் - ஷயித் மற்றும் அவெரா மெங்கிஸ்டு என்ற பணயக் கைதிகளின் பெயர் இருந்தது. மேலும் அந்த மன்றம், "இந்த வாரம் ஆறு பேரின் விடுதலையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்தும் " என்று தெரிவித்தது. அதைத்தொடர்ந்து அந்த மன்றம்,ஹமாஸ் சனிக்கிழமை உயிருள்ள மூன்று பணயக் கைதிகளை விடுவிப்பதுடன் ஒரு வாரம் கழித்து மேலும் மூன்று பேரை விடுவிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் "என்றும் தெரிவித்தது.

பாலஸ்தீனக் கைதிகள் :

இந்தப் பணயக் கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலர்க் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனைப் பெற்றவர்கள் ஆவார்.

மேலும் மற்றவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி போர்த் தொடங்கியதில் இருந்து காசாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Last hostages alive What did Hamas announce


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->