கனமழை எதிரொலி - 8 மாவட்டங்களில் பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி, தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கேரளாவில் இன்று பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.இந்த நிலையில் நாளை கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக திருச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால், இந்த விடுமுறை குடியிருப்பு பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும், முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leave to eight districts school and colleges for rain in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->