இஸ்ரேல் மீது ஆயுதங்களை பயன்படுத்துவோம்! - ஹிஸ்புல்லா எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஹிஸ்புல்லா வரும் காலங்களில் தொலைதூர ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் மீது  நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் காசாவில்  அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் இதற்கு  தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பிறகு, லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நேற்று ஹிஸ்புல்லா நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட், டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்தது. இதை  தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது வரும் காலங்களில் தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேல் மீது தொலைதூர ஏவுகணை அல்லது துல்லியமாக தாக்குதல்  ஏவுகணை பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு கிடையாது. ஆனால், வரும் காலங்களில் இஸ்ரேல் மீது இந்த ஆயுதங்களை பயன்படுத்துவோம்' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Let's use weapons on Israel Hezbollah Alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->