மரண பயத்தை காட்டும் இஸ்ரேல் - லெபனான் தாக்குதல்கள்!....ஹிஸ்புல்லா தலைவர் பலி! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.

மேலும் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறியதில்,  37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 23ம் தேதி லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்ததில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 569 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை, ராக்கெட் பிரிவு தலைவரான இப்ராகிம் குவாப்சி கொல்லபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

life Israel shows fear of death lebanon attacks hezbollah leader killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->