ஆயுதங்களை கைவிடும் ரஷ்ய வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படும் - உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து கெர்சன், ஜபோரிஜியா உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றுயுள்ளன.

இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதால், வீரர்களை அணி திரட்டுவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்று உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆயுதங்களை கைவிடும் ரஷ்ய வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷ்யாவை சோகத்திலிருந்தும், அவமானத்திலிருந்தும் காப்பாற்ற முடியும் என்று ரஷ்ய மொழியில் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் படைகளிடம் போரிட மறுத்து சரணடையும் ரஷ்ய வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் குற்றவியல் வழக்குகளிலிருந்து நீதியை பெற்று தருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Life support given to Russian soldier who surrender


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->