ரஷ்யா போக்குவரத்திற்கு எந்த சலுகையும் வழங்க முடியாது.! லிதுவேனியா.!
Lithuania bans Russian transport
ரஷ்யா போக்குவரத்திற்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என்று லிதுவேனியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன.
இந்நிலையில் ரஷ்யாவின் ஒரு பகுதியான பால்டிக் கடலில் அமைந்துள்ள கலினின்கிராட் பகுதிக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்திற்கு லிதுவேனியா நாடு எந்தவித சலுகையும் வழங்க முடியாது என்று அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் ஸ்டீல் மற்றும் பிற இரும்பு உலோகங்களின் போக்குவரத்தை தடை செய்து ரெயில் பாதையை தடுத்துள்ளது.
ஆனால் இந்தத் தடையானது பயணிகளுக்கான ரெயில் போக்குவரத்தை பாதிக்காது என்று அந்நாட்டின் பிரதமர் கிடானாஸ் நவ்சேடா கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யாவிற்கு சலுகைகள் வழங்க மற்றும் அந்நாட்டின் பொருட்களை கொண்டு செல்ல பாதுகாப்பான வழித்தடங்கள் அமைப்பது பற்றியோ பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று லித்துவேனியா அதிபர் கூறியுள்ளார்.
லிதுவேனியாவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா வருத்தத்தை தெரிவித்ததுடன், லித்துவேனியா இப்போது எங்கள் எதிரிகள் நாங்கள் பொறுத்திருந்து நல்ல முடிவை எடுப்போம் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Lithuania bans Russian transport