13 வயது முதல் வருவாய் ஈட்டி.. 18 வயதில் 3.71 கோடியில் சொந்த வீடு வாங்கிய இளம்பெண்.!  - Seithipunal
Seithipunal


லண்டனில் ஒரு இளம் பெண் தனது 18 வயதில் சொந்தமாக வீடு வாங்கி அசத்தியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த வாலண்டினா ஹாடூன் என்ற 18 வயது பெண் உணவகத்தில் பகுதி நேர வேலை செய்வது, ஆன்லைனில் எழுதுவது, நிறுவனங்களில் முதலீடு செய்வது என்று 13 வயது முதல் பணம் சம்பாதிக்க துவங்கியுள்ளார். 

அப்படி சிறுக, சிறுக அந்த பெண் சம்பாதித்த பணத்தை அவர் மேக்கப் சாதனங்களுக்கோ அல்லது ஆடை வாங்குவதிலோ எந்த விதமான செலவும் செய்யாமல் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்துள்ளார். அப்படி சேர்த்துக் கொண்டே இருந்த நிலையில் அவர் தன்னுடைய 18 வயதில் அந்த பணத்தை வைத்து சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளார்.

இந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 3 கோடியே 71 லட்சம் என்று கூறப்படுகிறது. 18 வயதில் ஒரு பெண் சொந்தமாக வீடு வாங்கியது தற்போது பலரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. போதைப் பழக்கம், ஊதாரித்தனம் என்று ஒரு தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், இளம் தலைமுறையினர் சிலர் இப்படியும் சாதனை செய்வது ஆச்சரியம் தருவதை தடுக்க முடியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

London 18 years Girl Bought New Home From Her Savings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->