ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கிறதா மலேசியா..? - பிரதமர் திட்டவட்டம்!
Malaysia supports Hamas Anwar Ibrahim
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மிகச்சிறிய நாடான மலேசியா, இந்தியாவை விட 10 மடங்கு பரப்பளவில் குறைவான இந்த நாட்டில் அதிக அளவில் இஸ்லாமிய சன்னி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர்.
அன்வர் இப்ராஹிம் இந்த நாட்டின் பிரதமராக உள்ளார். அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
பெரும்பாலான அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. அமெரிக்கா பாராளுமன்றம், ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் இது தொடர்பாக மலேசிய பாராளுமன்றத்தில் அன்வர் இப்ராகிம் பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, ''ஹமாஸ் அமைப்பினருக்கு மலேசிய மக்கள் ஒருங்கிணைத்து ஆதரவளிக்க வேண்டும்.
ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மண்டேலா ஆப்பிரிக்கா மக்களை காக்க இன வெறியை எதிர்த்து போராடியது போல் ஹமாஸ் அமைப்பினர் தங்களது மக்களுக்காக போராடி வருகின்றனர்.
அமெரிக்கா என்னும் தனி நாடு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு அச்சுறுத்தலுக்கு நான் அஞ்சப்போவதில்லை. நாங்கள் ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளை ஆதரிப்போம்'' என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் இவர் சில நாட்களுக்கு முன்பு காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலை காட்டுமிராண்டித்தனம் என பேசியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Malaysia supports Hamas Anwar Ibrahim