துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த நபர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், மர்ம நபர் ஒருவர் காரில் பாதுகாப்பு தடுப்புகளை மீறி நுழைந்துள்ளார். பிறகு அவர் கையில் துப்பாக்கியுடன் தரையிறங்கிய விமானங்கள் பெட்ரோல் நிரப்பும் இடத்திற்கு காரை ஓட்டிச்சென்றுள்ளார். 

இதைப்பார்த்த பாதுகாப்பு படையினர் உடனடியாக விமான நிலையத்தை சூழ்ந்துள்ளனர். மேலும், விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. 

இந்த மர்ம நபரின் காரில் இரண்டு குழந்தைகள் உள்ளதால், அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை வீட்டிலிருந்து கடத்தி வந்து, விமான நிலையத்தில் முற்றுகையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, பாதுகாப்புத்துறையினர் காரில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man come in german international airport with gun


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->