மாண்டஸ் புயல் : இலங்கையில் முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கூடங்கள் மூடல்.!
mantus storm schools close in srilanga
தமிழகத்தில் கடந்த 5-ந்தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாரி, பின்னர் புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'மாண்டஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வங்க கடல் பகுதியில் தீவிர புயலாக நிலைக்கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று காலை புயலாக வலுவிழந்தது. இதையடுத்து, சென்னை மாமல்லபுரத்தில் மான்டஸ் புயல் இரவு மூன்று மணி அளவில் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்த புயலின் எதிரொலியாக இலங்கையில், கொழும்பு மற்றும் பல நகரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து, தீவிர காற்று மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் உள்ள பள்ளி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மேலும், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புயல் காரணமாக, இலங்கையின் அனுராதபுரம், திரிகோணமலை, பொலன்னருவை, புட்டலம் மற்றும் மகா இல்லுபள்ளம்மா உள்ளிட்ட பகுதிகளிலும், சபராகமுவா மாகாணம் மற்றும் கல்லே, மதாரா, அனுராதபுரம் மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் நுவாரா-எலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
mantus storm schools close in srilanga