கனடாவின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மார்க் கார்னி பதவியேற்றுக்கொண்டுள்ளார்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் ஏற்பட்டு உள்ள நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமர் ஆக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மாதம் கனடாவில்  பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. 

இதனால், நெருக்கடி ஏற்பட, பிரதமர் பதவியில் இருந்தும், லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக ட்ரூடோ அறிவித்தார். இதனையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் ஆகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கனடா பொருட்களுக்கு டிரம்ப் அதிக விரி விதித்து வருகிறார். மேலும் கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக மாற்ற வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

இந்த மோதல் போக்கு உள்ள நிலையில், பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொட்ட இவர், அமெரிக்கா உடன் நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு தேவையான எம்.பி.,க்கள் ஆதரவு உள்ள போதிலும், மார்க் கார்னி எம்.பி.,யாக இல்லை. இதனால், கனடா பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mark Carney of the Liberal Party has been sworn in as the new Prime Minister of Canada


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->