பிரபல நடிகை சுட்டு படுகொலை.! அதிர்வலையில் நாடு.!
Mexican Actress Tania Mendoza
மெக்சிகோ நாட்டின் பிரபல நடிகையாக வலம் வந்த டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு ‘லா மேரா ரெய்னா டெல் சுர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரத்தில், சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி புகழின் உச்சிக்கே சென்றார்.
மேலும் அண்மைக்காலமாக இவர் பாடகியாகவும் தனது திறமையை வளர்த்துள்ளார். 42 வயதாகும் டானியா மெண்டோசாவுக்கு பதினோரு வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
இந்நிலையில், மோரேலோஸ் குர்னவாகா நகரில் கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்ட மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக வந்த டானியா மெண்டோசாவை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், டானியா மெண்டோசாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.
காருக்குள்ளேயே டானியா மெண்டோசா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மெக்சிகோ நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளில் பத்து பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பெண்ணியவாதிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது, அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mexican Actress Tania Mendoza