மெக்சிகோவில் சோகம்: கிறிஸ்துவ மத சடங்கு நடைபெற்ற போது ஏற்பட்ட கொடுமை! தொடரும் பலி எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ, டமாலிபாஸ் பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரமான சியுடாட் மடேரோ பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 

நேற்று விடுமுறை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் அங்குள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக சென்றிருந்தனர். 

அப்போது அங்கு ஞானஸ்னானம் என்ற கிறிஸ்தவ மத சடங்கு நடைபெற்றது. அப்போது அந்த தேவாலயத்தில் எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 

60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள் ஆவர். 

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் அவர்களின் 2 பேர் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கட்டிட இனிபாடுகளுக்கு இடையே 80கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க உதவ தேவைப்படும் உபகரணங்களை தந்து உதவி செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico church roof collapses killing least peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->