கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை சோதனை; அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்கிறார் கிம் ஜாங் அன்..!
Missile test on the Korean Peninsula
அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா.சபை தடை விதித்துள்ளது. அதனை பொருட்படுத்தாத வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தென்கொரியாவும், ஜப்பானும் தங்களது பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது.
ஆனால் , இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனினும் தென்கொரியா தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை நடத்துகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. குறித்த ஏவுகணை சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை தாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
English Summary
Missile test on the Korean Peninsula