தைவான் : விமானத்தில் திடீரென வெடித்த மொபைல் சார்ஜரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று தைவான் நாட்டில் உள்ள டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 என்ற விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்தது. 

இந்த நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் சார்ஜர் ஒன்று திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த விமான பணிப்பெண்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதில், சார்ஜரின் உரிமையாளர் மற்றும் அவரது அருகே அமர்ந்திருந்த நபர் என்று இரண்டு பேர் காயமடைந்தனர். உடனே அவர்களுக்கு அங்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. 

விமானத்தில் தீயை அணைத்த பின்னர் விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் தெரிவித்து உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mobile charger explossion in airplane at taiwan airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->