சத்தீஸ்கரில் உயிரிழந்த போலீஸ் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.!  - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கரில் உயிரிழந்த போலீஸ் வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்.! 

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை நடத்திவிட்டு வாகனத்தில் திரும்பிய போது, மாவோயிஸ்ட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வெடித்து டி.ஆர்.ஜி. ரிசர்வ் படையை சேர்ந்த பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:-

"சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். 

அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi condoles to maoists attck in chateesgarh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->