எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்: எலான் மஸ்க் அதிரடி தகவல்!
Money Transfer X App Elon Musk Information
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தில் ஆட்கள் குறைப்பு, எக்ஸ் என பெயர் மாற்றம் போன்ற பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
அது போல் தற்போது எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, 'எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
அடுத்த ஆண்டில் இறுதி ஒப்புதல் வந்த பின்னர் எக்ஸ் செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியும்' என தெரிவித்துள்ளார்.
English Summary
Money Transfer X App Elon Musk Information