உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக மாறிய மாண்டிரியல்..! - Seithipunal
Seithipunal


வட அமெரிக்கா நாடான கனடாவில் கடந்த சில மாதங்களாக மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வனப்பகுதிகளில் இதுவரை 2405 முறை தீப்பிடித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் நகரங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 3.8 மில்லியன் ஹெக்டருக்கு அதிகமான வனப்பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இதனிடையே இன்னும் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதால் கனடா மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மத்திய மேற்குப் பகுதி நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐ க்யூ ஏர் நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மான்ரியல் நகரம் மாறியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் புகழ் பெற்ற அயர்ன் மேன் ட்ரையத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ க்யூ ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் மாத தொடக்கத்தில் கனடாவில் இருந்த காற்று மாசின் அளவு தற்போது ஐந்து மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயால் நியூயார்க் நகரம் அதிக அளவு காற்று மாசுபாட்டை கொண்டிருந்ததாகவும், இது இந்தியாவின் டில்லி நகரத்தை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் காற்றின் தரம் குறைந்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நீச்சல் குளங்கள், விளையாட்டு திடல்கள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Montreal become most air pollution city in world due to wildfire in Canada


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->