ஐ.நா. கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் உரையாற்ற 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு.!
More than 100 countries support Ukraine president virtual speech at the UN meeting
அடுத்த வாரம் 21ஆம் தேதி நடைபெறும் உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் வலியுறுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பான முன்மொழிவை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசீலனை செய்தது. இதில் போர் காரணமாக ஜெலென்ஸ்கி பொதுச் சபைக் கூட்டத்தில், நேரில் பங்கேற்க முடியாது என்று உக்ரைன் விவகாரங்களுக்கான ஐ.நா. குழு தெரிவித்தது.
ஆனால் உக்ரைனால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்து. இதனையடுத்து நேற்று ஐ.நா சபை கூட்டத்தில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 193 நாடுகளை கொண்ட சபையில், பெலாரஸ், கியூபா, எரித்திரியா, ரஷியா மற்றும் சிரியா உட்பட ஏழு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. மேலும் 19 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆனால் இந்தியா உட்பட 101 நாடுகள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary
More than 100 countries support Ukraine president virtual speech at the UN meeting