ஆப்கானிஸ்தானில் கடும் குளிர்: 2 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் பலி.!
More than 2 lakh cattle died due to severe cold in Afghanistan
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிரால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் சாலை முழுவதும் பனி அடர்ந்து காணப்படுவதால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.
மேலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மீது பனி மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவால் 150கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 மாகாணங்களில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இதில் வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு இறப்பு நேரிடுவதாக விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு தடை விதித்ததை எதிர்த்து, பேரிடர் காலங்களில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
More than 2 lakh cattle died due to severe cold in Afghanistan