2-ம் உலகப்போர் குண்டு கண்டெடுப்பு.! மேற்கு ஜெர்மனியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப்போர் 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இப்போரில் ஜெர்மனி மீது அமெரிக்கா ஏராளமான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல குண்டுகள் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு ஜெர்மனியின் எசன் மற்றும் ஓபர்ஹவுசன் நகரங்களுக்கு இடையேயான எல்லையில் புனரமைப்பு பணிகளுக்காக குழி தோண்டியபோது, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 2-ம் உலகப்போரில் அமெரிக்காவால் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு மண்ணிலிருந்து வெடிகுண்டு அகற்றி, உரிய பாதுகாப்புடனும் குண்டை செயலிழக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் எசன் மற்றும் ஓபர்ஹவுசன் ஆகிய 2 நகரங்களில் இருந்து 3300-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 3 thousand people were evacuated in West Germany for 2nd world war bomb discovery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->