இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை: டிரம்ப் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்லாமியர்களுக்கு தடை விதிப்பதாக சர்ச்சைக்குரிய பேச்சிக்கு வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்தது. 

டிரம்ப், நேற்று நடைபெற்ற குடியரசு கட்சி யூதக் கூட்டணியின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பேசியபோது தெரிவித்திருப்பதாவது, ''உங்களுக்கு பயணத்தடை நினைவிருக்கிறதா மீண்டும் இஸ்லாமியர்களுக்கான பயண தடையை கொண்டு வருவேன்'' என தெரிவித்தார். 

மேலும், இஸ்லாமியர்களுக்கான பயண தடை அவரது ஆட்சியின்போது விதிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது என்று தெரிவித்த ட்ரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை ஏனென்றால் நாட்டில் இருந்த மோசமானவர்கள் வெளியேறியதே அதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிபராக பதவியேற்று தொடக்கத்தில் ஈரான், சோமாலியா, சிரியா, ஏமன், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பணிகளுக்கு  கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். 

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்தது. அதில், இந்த தாக்குதல்கள் அரேபிய, அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கு நேர்மையற்றவை. 

இதுபோன்ற நபர்களின் பேச்சுகள் ஜனாதிபதி ஜோ பைடனை போலவே மனித மாண்பில் நம்பிக்கை கொண்ட அனைத்து அமெரிக்கர்களும் கண்டிக்கத்தக்க கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslims Controversy Trump comment White House condemned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->