டிரம்பின் அதிரடி உத்தரவு; இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ள நாசா..!
NASA has fired a female officer of Indian origin
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி நீலா ராஜேந்திரா நாசாவில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் எலான் மஸ்க் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பரிந்துரைப்படி பல துறைகள் அதிரடியாக மூடப்பட்டன. அரச துறையில், பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், பல்வேறு துறைகள் பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக, நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்துறை (டிஇஐ) பதவியில் இருந்த நீலா ராஜேந்திராவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் தலைமையிலான குழு இந்த துறையை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நீலா ராஜேந்திராவின் பதவியை காப்பாற்ற, அவர் வகித்த பதவி ' Head of Office of Team Excellence and Employee Success' என மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால், இதனை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டதாக, தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நாசா தெரியப்படுத்தியுள்ளது.
English Summary
NASA has fired a female officer of Indian origin