இந்தியா நிலவில் கால் பதித்து விட்டது! நாம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம்! பாக். முன்னாள் பிரதமர் வேதனை!
NawazSharif painfully said Pakistan begging before the world
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தை கலைதாதுவிட்டு பொது தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வரும் அக்டோபர் மாதம் இறுதியில் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து லண்டனில் இருந்து காணொளி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியா நிலவில் தடம் பதித்தும், ஜி-20 மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்தியும் எங்கோ சென்று விட்டது.
ஆனால் நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களால் செய்ய முடிந்த சாதனைகளை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? இதற்கு காரணம் நம் நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் தான். எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் நமது கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
NawazSharif painfully said Pakistan begging before the world