அமெரிக்கா : கால்பந்து மைதானத்திலேயே உயிரிழந்த 16 வயது சிறுமி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் லாஸ் வேகாஸ் நகரில் டெசர்ட் ஓசிஸ் உயர்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி சோபோமோரே ஆஷாரி ஹியூஜஸ். இவர் படித்த பள்ளியிலேயே, இவரது பள்ளிக்கும், வேலி உயர்நிலை பள்ளிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. 

இதில் சோபோமோரே கலந்துகொண்டு விளையாடியபோது அவர் திடீரென சரிந்து, விழுந்துள்ளார். இதைப்பார்த்த மற்றொரு சிறுமியின் தாயாரான ஆபீலியா பைபர்-ஹில் என்ற நர்ஸ் உதவிக்கு ஓடி வந்து, சோபோமோரேவுக்கு முதலுதவி அளித்து உள்ளார். 

அதைத்தொடர்ந்து அங்குள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதனால், அவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து, அவரது பெற்றோரான என்டிரோடா மற்றும் டுவெய்னே ஹியூஜஸ் தெரிவித்ததாவது, "சோபோமோரேவுக்கு இசை மற்றும் நடனம் என்றால் மிகவும் புடிக்கும். அவர் தன்னை சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் நேசித்தவர். தனது வாழ்வின் உண்மையான காதல் என்று கால்பந்து விளையாட்டை கூறுவார்" என்று தெரிவித்தனர். 

கால்பந்து விளையாட்டின் போதே சிறுமி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவ மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near america sixteen years old girl died in foot ball ground


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->