நேபாளம் : விமான நிலைய ஓடு பாதையில் விமானம் தீ பிடித்து விபத்து - 5 பேர் பலி ..!! - Seithipunal
Seithipunal



நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானம் தீ பிடித்து எரிந்ததில், அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 

நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா விமானம் 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு பொக்காராவுக்கு புறப்பட்டது. அப்போது விமான நிலைய ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விமானம் சறுக்கி உள்ளதாகத் தெரிகிறது. 

இதன் காரணமாக விமானத்தில் தீ பிடித்துள்ளது. இதையடுத்து விமான நிலைய ஓடுபாதை முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அங்கிருந்து வந்த முதற்கட்ட தகவலின் படி, விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து சம்பவம் நடந்த திரிபுவன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து "நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா விமானம் பொக்காராவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தது என்றும், அப்போது ஓடு பாதையில் விமானம் புறப்பட்ட போது திடீரென விமானம் சறுக்கியதால், விமானத்தில் தீ பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது" என்றும் TIA  செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal Airplane Crash While Takeoff


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->