16 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நேபாள அரசு தடை.!
Nepal bans medicines from 16 Indian firms
அத்தியாவசிய மற்றும் வாழ்வில் நடைமுறைக்கு தேவையான மருந்துகளை நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்ய இந்திய மருத்துவ நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதைத்தொடர்ந்து மருத்துவ நிறுவனங்களை ஆய்வு செய்ய, நேபாள மருத்துவ ஆய்வாளர்கள் குழுவை கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியாவிற்கு அனுப்பியது.
இந்நிலையில் நிறுவனங்களை ஆராய்ச்சி செய்த குழுவினர் நேபாள முகவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த ரேடியன்ட் பேரன்டெரல்ஸ் லிமிடெட், மெர்குரி லேபரட்டரீஸ் லிமிடெட், அலையன்ஸ் பயோடெக், கேப்டாப் பயோடெக், அக்லோமெட் லிமிடெட், ஜீ லேபரட்டரீஸ் லிமிடெட், டாஃபோடில்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ஜிஎல்எஸ் பார்மா லிமிடெட், யுனிஜூல்ஸ் லைஃப் சயின்ஸ் லிமிடெட், கான்செப்ட் பார்மாட் உள்ளிட்ட 16 நிறுவனங்களின் மருந்துகளை நேபாளத்தில் விற்கவோ அல்லது சந்தைப்படுத்தவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி நடைமுறையை பின்பற்றாததால் இந்த மருந்துகளுக்கு தடை விதிப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து குளோபல் ஹெல்த் கேர் தயாரித்த 5 மி.லி மற்றும் 500 மி.லி சுத்திகரிப்பான்களை நேபாளத்திலிருந்து திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Nepal bans medicines from 16 Indian firms