இந்தவாரம் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம் - எலான் மஸ்க் தகவல்.!
new head officer allounce in twitter company
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். இதற்கிடையே டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா என்பவர் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2018இல், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் வழங்கிய இழப்பீடு தொகை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கிற்காக நேற்று எலான் மஸ்க் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியங்களை அளித்தார். அப்போது எலான் மஸ்க் பேசியதாவது, "நான் எந்த நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்க விரும்பவில்லை" என்று வெளிப்படையாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்மூலம், எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக எப்போதும் இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த வாரம் டுவிட்டரில் மறுசீரமைப்பை முடிக்க முடியும் என்றும் டுவிட்டருக்கான புதிய தலைமை அதிகாரியை நியமிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
new head officer allounce in twitter company