சீனாவில் புதிய வைரஸ் தாக்கம்; மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; உலக நாடுகள் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


சீனாவில்  ஹியூமன் மெடா நிமோ வைரஸ் எச்எம்பிவி ( Human MetaPneumo Virus) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. 

இந்த வைரஸ், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் சீனாவில் மீண்டும் மருத்துவமனை மற்றும் மயானங்கள் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. 

இது குறித்த புகைப்படங்கள் அந்நாட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. எச்எம்பிவி எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான காய்ச்சல், நுழையீரல் தொற்று பாதிப்பு ஏற்படுத்துகிறது. 

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், மூச்சுவிடுவதில் பிரச்னை உள்ளிட்டவை முதலில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் பரவக்கூடிய தொற்று நோயாக சீனா சுகாதாரத்துறையினர் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதை கண்காணித்து வருவதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

.இந்த வைரஸ் கடந்த 2001ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது., பொதுவாக சுவாசப்பாதை மற்றும் தொண்டையில் தான் தொற்றை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு  நிமோனியா, ஆஸ்துமா உள்ளிட்டவற்றை உண்டாக்கும். இந்த வைரஸ் காரணமாக 03 முதல் 06 நாட்கள் வரை பாதிப்பு இருப்பதோடு,  வைரஸ் தொற்றின் தாக்கத்தை பொறுத்து இது மாறுபடும் எனவும் கூறப்படுகிறது.

இந்த எச்எம்பிவி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க கைகளை சோப் மற்றும் தண்ணீர் மூலம் 20 நொடிகள் கழுவ வேண்டும் எனவும், கைகளை கழுவாமல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என்றுஜ் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கூடாது. வெளியில் செல்லும்போது மாஸ்க்  கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க எந்த சிகிச்சையும், தடுப்பூசிகளும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. 

தற்போது, இப்பிரச்னை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு சீனாவில் உருவான கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதில் உலகளவில் கோடிக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இதில் இருந்து தற்போது தான் பல நாடுகள் மீண்டு வருகின்றன.

சீனாவால் உலகநாடுகள் முடங்கிய நிலையில், தற்போது அங்கு எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New virus outbreak in China


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->