அமெரிக்காவில் பரபரப்பு : 'புது மாப்பிளையான' இந்திய இளைஞர் சுட்டுக் கொலை..!! - Seithipunal
Seithipunal



அமெரிக்காவில் புதிதாக திருமணம் ஆன இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவைச் சேர்ந்தவர் கவின் தசூர் என்ற 29 வயது இளைஞர். இவருக்கும், அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தைச் சேர்ந்த விவியனா ஜமோரா என்பவருக்கும் கடந்த ஜூன் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்படி இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வாரங்களே ஆகிறது. 

இந்நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை கவின் தசூர், தனது மனைவி விவியனா ஜமோராவுடன் தனது காரில் தங்களது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இண்டியானாபோலிஸ் நகரில் கவின் தசூருக்கும், வழியில் வந்த ஒரு டிரக் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது தகராறு முற்றியதில் டிரக் டிரைவர் தீடிரென துப்பாக்கியால் கவின் தசூரை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் தசூர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது கவின் தசூருடன் இருந்த அவரது மனைவி விவியனா ஜமோரா தெரிவிக்கையில், "நாங்கள் இருவரும் மிக உருக்கமாக காதலித்து வந்தோம். 3 வாரங்களுக்கு முன்பு தான் எங்களுக்குத் திருமணம் நடந்தது. எங்களது எதிர்காலத் திட்டங்கள் குறித்து நாங்கள் பல்வேறு கனவுகள் கொண்டிருந்தோம். மேலும் உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செல்வது, தேனிலவு குறித்து பல்வேறு திட்டங்கள் வகுத்திருந்தோம்" என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இண்டியானாபோலிஸ் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "துப்பாக்கிச்சூடு செய்த டிரக் டிரைவரை நாங்கள் உடனடியாக கைது செய்துவிட்டோம். தன்னுடைய தற்காப்புக்காகவே அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக போலீசார் கருதுவதால் விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newly Married Indian Man Shot Dead in US


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->