சுழற்றி அடித்த சூறாவளி - பிரச்சாரக் கூரை விழுந்து 9 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், நியூவோலியோன் மாகாணம் சான்பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டனர்.

அப்போது, திடீரென சூரைக்காற்று வீசியதால் குடிமக்கள் முன்னேற்றக் கட்சியின் பிரசார மேடை சரிந்து ஒன்பது பேர் மரணமடைந்ததுடன் ஏராளமானோர் காயமடைந்தனர். இதுகுறித்து, குடிமக்கள் முன்னேற்ற இயக்கத்தின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோர்கே அல்வரேஸ் மெய்னேஸ் பேசியதாவது, ”பலத்த காற்று அடித்ததில் சான் பெட்ரோ கார்சா கர்சியா நகரில் நடந்த பிரசார மேடை சரிந்தது.

பிரசார மேடை சரிந்ததைக் காட்டும் காணொளியில் அந்த மேடை, கூட்டத்தினர் இருந்த பகுதியில் முன்னோக்கி சரிவது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த அரசியல்வாதிகள் பாதுகாப்பான இடம் தேடி ஓட, கூடியிருந்த மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடிப்பதைக் காணொளி காட்டியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine peoples died for election campaighn roof fell down in mexico


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->