எதிர்காலத்தில் ஆண் குழந்தைகளே பிறக்காது...ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


குரோமோசோம்கள் தான் மனிதர்களை ஆண்கள், பெண்கள் என தீர்மானிக்கும் சூழலில்,  பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ளது. இந்த  நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக அதிர்ச்சி தகவலை புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.    

X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் இணையும் போது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில், அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது.

தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, ஆராய்ச்சியாளர்கள் ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளது கண்டறிந்துள்ளனர். இதனால் மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No boys will be born in the future Shocking information revealed in the study


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->