வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.!
North Korea again missile tests
வடகொரியா சர்வதேச விதிமுறைகளை மீறி மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு தென் கொரியா உட்பட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இருப்பினும் வடகொரியா ஐ.நா. மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் எதையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்ட அணு ஆயு பரிசோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி செய்து வருகிறது.
இந்தநிலையில், மீண்டும் வடகொரியா இன்று கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக, தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
North Korea again missile tests