ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தும் வடகொரியா.! ஜப்பான் கடற்பகுதியில் மீண்டும் சோதனை.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை செய்து வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பற்றத்தன்மை நிலவி வருகிறது.

அமெரிக்கா போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தென்கொரியாவிற்கு வருகை தந்தது, அமெரிக்கா மற்றும்  தென்கொரியாவிற்கிடையான ராணுவ கூட்டு பயிற்சி ஆகிய காரணங்களால் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை எல்லையில் தீவிரபடுத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப் போர் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணைகள் ஜப்பான் பொருளாதார நகரப் பகுதிக்கு வெளியே உள்ள கடற்பகுதியில் விழுந்ததாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea intensify missile test in border


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->