செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி சோதனை செய்த வடகொரியா.! - Seithipunal
Seithipunal


வடகொரியா நாட்டிலிருந்து ஏவுகணை சோதனைகளை நடத்துவதற்கு சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை நிறைவேற்றியது.

ஆனால், வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை புறக்கணித்தும், ஐ.நா. வின் தீர்மானத்தையும் மீறி  தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

அதன் படி, நேற்று முன்தினம் வடகொரியா ஒரே நாளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்தன. 

வடகொரியாவின் இந்த ஏவுகணை ஜப்பான் நாடு வரை சென்று தாக்கும் வல்லமை உடையவை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியாக, நேற்று மாதிரி செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி சோதனை செய்து பார்த்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று அந்த நாட்டின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் தெரிவித்தது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் உளவு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north korea launch satlite for test in sky


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->