போர் பதற்றத்திற்கு மத்தியில்.. புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்திய வடகொரியா..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து வடகொரியா, கொரிய எல்லை பகுதிகளில் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா, ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதம் மற்றும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தபொழுது, ஹவாசன்-31 எஸ் என்ற சிறிய ரக அணு ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த சிறிய ரக அணுகுண்டுகளை பாலிடிக் ஏவுகணைகளில் பொருத்தும் தொழில்நுட்பம் மற்றும் இலக்குகளை தாக்கும் திறன் ஆகியவற்றை அதிபர் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹவாசன்-31 குண்டுகள் மற்றும் அதிபர் பார்வையிட்டதற்கான புகைப்படங்களை மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே ஹவாசன்-31 உள்ளிட்ட ஆயுதங்கள் அளவில் சிறியவையாக இருந்தாலும் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea launches new nuclear weapons amid war tensions


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->