வடகொரியா: கிழக்கு கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணை சோதனை..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கடந்த ஓராண்டாக அவ்வப்போது கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதை எதிர்த்து கொரியா மற்றும் ஜப்பான் எல்லை பகுதிகளில் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

மேலும் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையே சுதந்திரக் கேடயம் பயிற்சி தொடங்கியபொழுதும், ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையே உச்சி மாநாடு நடைபெற்றபொழுதும் வடகொரியா எதிர்ப்பு தெரிவித்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

இந்நிலையில் வடகொரியா தனது வடமேற்கு பகுதியிலிருந்து குறுகிய தூர ஏவுகணையை கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவியுள்ளது. இது தொடர்பாக தென் கொரியா ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வட கொரியாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை கடலில் இலக்கை தாக்கி அழிப்பதற்கு முன் நாடு முழுவதும் பறந்து சென்றதாகவும், இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் கொரியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை எதிர்த்தே வடகொரியா இந்த சோதனையை செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea missile test again in the East Sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->