தோல்வியடைந்த வடகொரியாவின் உளவு திட்டம்! திறமை இல்லையென கேலி! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ பணிகளை உளவு பார்க்க வடகொரியா செயற்கோள் ஏவியது:

வடகொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ பணிகளை உளவு பார்க்க, அடிக்கடி ஏவுகணை சோதனை செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், வடகொரியா சிறிதும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.

அதுபோல் கடந்த மே மாதம் அமெரிக்கா, தென்கொரியாவின் ராணுவப் பணிகளை உளவு பார்க்க உதவிகரமாக இருக்கும் என எண்ணி வடகொரியா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது.

இந்த செயற்கைக்கோளை நிலைநிறுத்தி விட்டால் மிகப்பெரிய வெற்றி இருக்கும் என வடகொரியா கருதியது. ஆனால், செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்பட்டதால் தென்கொரியா தீபகற்ப கடலில் விழுந்து விட்டது. 

இதனை மிகப்பெரிய தோல்வியாக கருதிய வடகொரியா, வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரி செய்து மீண்டும் செயற்கைக்கோளை செலுத்த முயற்சி மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே தென்கொரியா உடைந்த செயற்கைக்கோளின் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டது. சுமார் 36 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தி கப்பற்படை, விமானப்படை, நீரில் மூழ்கி தேடும் வல்லுனர்கள் ஆகியோரை கொண்டு செயற்கைக்கொளில் துண்டுகளை சேகரித்தது. 

தென்கொரியா மற்றும் அமெரிக்க வல்லுனர்கள் கொண்டு செயற்கைக்கோளை ஆய்வு செய்தபோது வடகொரியாவுக்கு ராணுவ பணிகளை உளவு பார்க்கம் திறனில்லை என்பது தெரியவந்தது என தென்கொரியா கருத்து வெளியிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea nsatellitere connaissance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->