ராணுவ உளவு செயற்கைக்கோள் திட்டமிட்டபடி செலுத்தப்படும் - வடகொரியா அதிரடி - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதம் மற்றும் தொலைதூர ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவும், தென்கொரியாகவும் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி மேற்கொண்டு வருவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானின் ராணுவ நடவடிக்கைகளை கவனிப்பதற்காக முதல் முறையாக ராணுவ உளவு தொடர்பான செயற்கைக்கோள் வரும் ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என வடகொரியா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் மே 31ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதிக்குள் திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த செயற்கைக்கோள் மூலம் மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல் மற்றும் லூசோன் தீவு பகுதிகள் பாதிக்கப்படலாம் என வடகொரியா தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஜப்பான் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணைகள் நுழைந்தால் சுட்டு வீழ்த்த ராணுவத்திற்கு ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் யசுகாசு ஹமடா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் திட்டம் ஜப்பான் மற்றும் தென்கொரியா கடல்பகுதியில் போர் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea spy satellite to be launched as planned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->