ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான வடகொரியா ஐ.நா மற்றும் பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஓராண்டாக கொரிய எல்லைப் பகுதியில் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சோதனைகளை செய்து வருகிறது. மேலும் இம்மாத தொடக்கத்தில் கப்பலிருந்து அணுஆயுத ஏவுகணையை வீசி சோதனை செய்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் ஏற்படும் பதற்றத்தை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஜப்பான் மற்றும் வடகொரியா எல்லை பகுதிகளில் பாலஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானின் பொருளாதார மண்டலத்திற்கு அருகே உள்ள கடலில் விழுந்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை நகரங்களில் ரயில் சேவைகள் மற்றும் பள்ளிகள் நிறுத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பேசிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea tests missile again in Japan sea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->