கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர் - வடகொரியா கடும் எச்சரிக்கை
North Korea warns that nuclear war in Korea peninsula
கொரிய தீபகற்ப்பத்தில் தென்கொரியாகவும், அமெரிக்காவும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து வடகொரியா அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இது தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே மீண்டும் தென் கொரியா ராணுவமும், அமெரிக்காவும் கூட்டு கப்பற்படை பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குவதாக வடகொரியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் இறையாண்மை மற்றும் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இதே நிலை தொடர்ந்தால் முன் எப்போதும் இல்லாத வகையில் அணு ஆயுதப் போர் நடைபெறும். இது மிகுந்த பேரழிவை ஏற்படுத்தும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பேச்சு வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காமல், இரு நாடுகளும் ராணுவ செயல்பாடுகளை தொடர்வது கொரிய தீபகற்ப்பத்தில் அமைதியை நிலை நிறுத்தாது என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
North Korea warns that nuclear war in Korea peninsula