தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரியா டிரோன்கள்.! எல்லையில் பதற்றம் அதிகரிப்பு - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டதை எதிர்த்து வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வடகொரியா 5 டிரோன்களை தென் கொரியாவிற்குள் அனுப்பியுள்ளது. தென்கொரியா வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 ட்ரோன்கள், எல்லைப் பகுதியான ஜியோங்கி மாகாணத்திற்குள் நுழைந்து வட்டமிட்டன.

மேலும் இதில் ஒரு ட்ரோன் தென்கொரியா தலைநகர் சியோல் வரை சென்றது. இதனால் தென்கொரியாவில் பெரும் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து தென்கொரியாவின் விமானப்படை வடகொரியா டிரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்றன. ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து சுமார் 100 முறை டிரோன்கள் நோக்கி சுடப்பட்டது.

இந்நிலையில் வடகொரியா ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது விரட்டியடிக்கப்பட்டதா என்று தென்கொரிய ராணுவம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கொரியா வான் எல்லைக்குள், வடகொரியா டிரோன்கள் நுழைவது இதுவே முதல் முறை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korean drones entered South Korea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->