உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! தென்னாப்பிரிக்கா vs ஆஸ்திரேலிய அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது.

சிட்னியில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர்-கவாஸ்கர் கோப்பையை மீண்டும் பெற்றது.

தென்னாப்பிரிக்கா ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அந்த இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.  

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததன் மூலம், அந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். இதில்  தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OICC WTC 2025 final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->