கொலம்பியாவில் எண்ணெய் தொட்டி வெடித்து தீப்பிடிப்பு.! தீயணைப்பு வீரர் பலி.!
Oil tank explodes in Colombia
கொலம்பியாவில் எண்ணெய் தொட்டி வெடித்து தீப்பிடித்ததில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள கரீபியன் நகரமான பாரன்குவிலாவில் அருகே ஒரு கம்பெனியில் நேற்று அதிகாலை திடீரென எண்ணெய் தொட்டி வெடித்து தீ பிடித்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அருகில் உள்ள எரிபொருள் தொட்டிகளுக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மூன்று நாட்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தீயணைப்பு பணியின் போது தவறி விழுந்த தீயணைப்பு வீரர் ஜேவியர் சோலனோ (53) உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை பாரன்குவிலா துறைமுகத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Oil tank explodes in Colombia